2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

களுவாஞ்சிக்குடியில் தங்கநகைகள் திருட்டு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 05 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருக்கள்மடம் பகுதியிலுள்ள விஷ்ணு கோவில் வீதியை அண்டி  அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.   

இந்த வீட்டில்  புதன்கிழமை (04) எவரும் இல்லாத நிலையில், உடைத்துக்கொண்டு நுழைந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 4 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 10 பவுண் தங்கநகைககளைத் திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டுக்கு வந்த உரிமையாளர், வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளமையை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்படி வீட்டு உரிமையாளர்  முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X