Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 05 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
காத்தான்குடிக் கடற்கரையில்; கழிவுகள் போடுவதற்காக மூன்று கழிவுத் தொட்டிகள் காணப்படும் போதிலும், அத்தொட்டிகளில் கழிவுகள் இடப்படாமல் அவை ஆங்காங்கே வீசப்பட்டுக் காணப்படுகின்றன என, சூழலியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கடற்கரையோரத்தை தூய்மையாகப் பேணும் பொருட்டு, அங்கு பல்வேறு வகைக் கழிவுகளையும் போடக்கூடிய கழிவுத் தொட்டிகள், சமீப ஒரு சில நாட்களுக்கு முன்னர் காத்தான்குடி நகரசபையால் வைக்கப்பட்டுள்ளன.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள், கடதாசி மற்றும் காட்போட் கழிவுகள், உணவு மற்றும் பழவகைக் கழிவுகள் என்று தரம் பிரித்துப் போடுவதற்காக தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இருந்த போதிலும், இந்தக் கடற்கரைக்கு வரும் பொழுது போக்காளர்கள் கடற்கரையில் அமர்ந்திருந்தவாறு உட்கொண்டு, அருந்திவிட்டு அவற்றின் கழிவுகளை அங்கேயே வீசி விட்டுச் செல்கின்றனர்.
கடற்கரையில் காணப்படும் இந்தக் கழிவுகளைப்; பறவைகளும் விலங்குகளும் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் கடலிலும் இழுத்துச் சென்று போடுகின்றன. இதனால், சூழல் மாசடைகின்றது எனவும் சூழலியலாளர்கள் கூறினர்.
மேலும், இக்கழிவுகளை அகற்றுவதில் நகரசுத்தித் தொழிலாளர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்குகின்றனர்.
கடற்கரையில் சிதறிக் கிடக்கும் பிளாஸ்ரிக் போத்தல்கள் காற்றில் உருண்டோடி கடலில் சேர்வதால், கடல் வளத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சூழலியலாளர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
24 May 2025