Kanagaraj / 2015 நவம்பர் 11 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்து போராடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வியாழக்கிழமை காலை நடாத்தவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கட்சி பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் வியாழக்கிழமை நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு இன, மத பேதங்கள் மற்றும் அரசியலுக்கு அப்பால் அனைத்து தமிழ் உறவுகளும் தங்களுடைய ஆதரவை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுக்கின்றார்.
இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா ,ந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மு. இராஜேஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago