Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
வ.துசாந்தன் / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்துக்கு உட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்னு மகா வித்தியாலயத்தில், கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு, நேற்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில், 1996ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், உயர்தர வகுப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியடையும் மாணவர்கள் பலர், உயர்தரம் கற்பதற்கு தூர இடம்செல்ல வேண்டியதாலும், தங்களது பெற்றோரின் வருமானம் போதாதமையினாலும், கல்வியை இடையில் நிறுத்துவதுண்டு.
இந்த விடயத்தை தமது கவனத்துக்கு கொண்டுவந்ததற்கமைய, இப்பாடசாலையில் உயர்தரம் ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக, மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார்.
இப்பாடசாலையில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சைக்கு 2016ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களுள் 17 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .