ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானைகளின் கூட்டம், கடந்த சில தினங்களாக ஏறாவூரை அண்டிய செங்கலடி கறுப்புப் பாலம் பகுதியில் நடமாடி வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது என பிரதேசத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இதே காலப்பகுதியில் வனத்திலிருந்து புறப்படும் காட்டு யானைக் கூட்டங்கள், இவ்வாறு நீர் நிலைகள் மற்றும் மரஞ்செடி கொடிகளுள்ள நகரை அண்டிய பகுதிகளை நோக்கிப் படையெடுப்பதுண்டு, என அவதானிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சென்ற வருடமும் அதற்கு முந்திய வருடத்திலும் இவ்வாறு ஏறாவூர் மற்றும் செங்கலடி நகரப் பிரதேசத்தை நோக்கி வந்த காட்டு யானைகள், சில தினங்களாக அப்பகுதிகளில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடமாடித் திரிந்ததோடு, பயிர்களையும் துவம்சம் செய்திருந்தன.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago