2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காட்டு வேளாண்மையால் விசாயிகள் பாதிப்பு

Mayu   / 2025 ஜனவரி 08 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி கமலந கேந்திர நிலையத்திற்குட்பட்டு செய்கை செய்யப்பட்டுள்ள வேளாண்மைச் செய்கையில் காட்டு வேளாண்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வயலில் வேளாண்மையைப் போன்றே வளரும் குறித்த காட்டு வேளாண்மையை அகற்றுவதற்கு விவசாயிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, பாரிய சவால்களையும் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காட்டு வேளாண்மையின் தாக்கம் அதிகரிப்பால் எதிர்பார்த்த விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் தொடர்ந்தும் இவ்வாறு காட்டு வேளாண்மையின் தாகத்தினாலும் மேலும் பாதிக்கப்படுவதனால் தமது இவ்வருட வாழ்வாதாரத் தொழில் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

எனவே இவ்வாறான நிலையிலும் விவசாயிகளுக்குரிய மானியங்கள் வழங்கப்படுவதில் திருப்தியற்ற சூழல் காணப்படுவதாகவும், இவ்வாறான தாக்கங்களைக் கட்டுப்படுவத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும், பாதிப்புக்களுக்கு ஏற்ற மேலதிக இழப்பீடுகனையும் அரசு வழங்க முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

வ.சக்தி       

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .