Freelancer / 2025 மார்ச் 15 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண் சிசுவை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த சிசுவை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று, அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், சிசுவை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் சிசுவை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.AN
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago