Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கோவில்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில், சிலரின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
குறித்த தனியார் காணிக்குள் தமக்கும் காணிகள் உள்ளதாக கூறிய சிலர், அங்கிருந்த வேலிகளை அகற்ற முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
குறித்த பகுதி, சிலர் பரம்பரையாக வாழ்ந்த பகுதியெனவும் சிலருக்கு 1973ஆம் ஆண்டு மரமுந்திரிகை செய்கையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட காணியெனவும் அதற்கான உறுதிகள் உள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு எழுதப்பட்ட காணி உறுதிப்பத்திரங்களுடன் தமது காணிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சிலர், வேலிகளின் கட்டைகளை கழட்டி அத்துமீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும், காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, இக்காணி பிரச்சினை தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் விசேட கூட்டம் நடத்தப்பட்டு தமது காணி என உறுதிப்படுத்தப்பட்ட காணியிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் சிலர் தம்மீது அழுத்தங்களை பிரயோகிக்க முனைவதாகவும் குற்றஞ்சாட்டும் காணி உரிமையாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தமிழர் ஒருவர் தான் குறித்த காணியை வாங்கியுள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் சிலர் வந்துதமது காணியின் வேலிகளை அகற்ற முனைவதாகவும் இது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் காணி உரிமையாளர்கள் இங்கு தெரிவித்தனர்.
யுத்த சூழ்நிலையில் தாங்கள் தமது காணிகளில் குடியிருக்க முடியாத நிலையிருந்தபோதிலும் அவற்றைப் பராமரித்து வந்தாகவும் அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பவ இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன், குறித்த பிரச்சினை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாகவும் தெரிவித்தார்.
57 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago