Princiya Dixci / 2021 மார்ச் 03 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக் கண்டித்து, ஏறாவூர், புன்னக்குடா பிரதேச மக்கள், இன்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கடக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்பற்று-செங்கலடி, ஆகிய பிரிவுகளில் உள்ள அரச காணிகளுடன் இணைந்து பொதுமக்களின் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களின் காணிகளை ஒரு குழுவினர் விற்பனை செய்துவருவதாகவும் அதற்கு அதிகாரிகளும் துணை போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, இப்பகுதியில் உள்ள காணிகளை அரச அதிகாரிகளுக்கு பணத்தைக்கொடுத்து இவ்வாறான காணி அபகரிப்பை அக்குழுவினர் முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் நீண்டகாலமாக அபகரிக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி முறையான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமக்கு வழங்கப்பட்ட காணிகள், இவ்வாறு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .