2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காணி நடமாடும் சேவையை நடத்தி தீர்வு காணுமாறு ஆலோசனை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டுமுறிவுகுளம் பகுதியில் விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் காணி ஆவணப் பிரச்சினைக்கு, காணி நடமாடும் சேவையை நடத்தித் தீர்வுகாணுமாறு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார், மாகாண காணி ஆணையாளரைக் கேட்டுள்ளார்.

பிரதேச விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே, கடிதம் மூலமாக அவர் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார்.

குறித்த பிரதேச விவசாயிகள் தாங்கள் நீண்டகாலமாக விவசாயம் செய்துவரும் காணிகளுக்கு உரித்தாவணம் இல்லாத பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர் என்றும், எனவே, இப்பிரச்சினைக்கு காணி நடமாடும் சேவையை நடத்தித் தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக, அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுமுறிவுகுளம் விவசாயப் பிரதேசத்தைச் சேர்ந்த 285 விவசாயிகள், கடந்த 50 வருட காலமாக காணி ஆவணங்கள் ஏதுமின்றி சிரமப்படுகின்றனர் என, கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

இதுபற்றி விவசாய அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X