2025 மே 10, சனிக்கிழமை

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இன்று (28) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கலடி - பதுளை வீதியிலுள்ள மக்கள் கலந்துகொண்டு, தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

அபிவிருத்தி என்னும் பெயரிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, கல்குடா, புல்லுமலை, வாழைச்சேனை, வாகரை போன்ற இடங்களில் அரசியல்வாதிகளாலும் இராணுவத்தினராலும் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள மக்களிடம் வழங்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X