Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி நாவலடியில் படையினர் நிலை கொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை, விடுவிக்குமாறு கோரி, காணியை இழந்த மக்கள், 5ஆவது நாளாக நேற்றுச் செவ்வாய்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டம், எதுவித உறுதிமொழிகள் மற்றும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் வருகை தராமையால் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது.
நாவலடிச் சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாம் பகுதியில் இராணுவத்தால் கையக்கப்படுத்தப்பட்டு இருக்கும் 8 ஏக்கர் தனியார் காணியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே, இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
நாவலடிப் பகுதியில் தற்போதுள்ள இராணுவ முகாம் 18 பேரின் காணிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம் அமைக்கப்பட்டதன் காரணமாக 18 பேர், தமது வீடுகளை இழந்திருக்கின்ற போதிலும், இருவருக்கு மாத்திரம் பிரதேச செயலகத்தால் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 16 பேரினதும் காணிகளை பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .