2025 மே 10, சனிக்கிழமை

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு நிதியுதவி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்கென, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியளித்திருப்பதாக, காத்தான்குடி தள வைத்தியசாலையில் அபிவிருத்திக் குழுவின் தலைவர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.எம். ஜாபிர் தெரிவித்தார்.

காத்தான்குடி தள வைத்தியசாலை 'ஏ' தரத்துக்குத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து அங்கு அமையப்பெறவுள்ள வைத்திய  ஆலோசகர்களுக்கான வதிவிடக் கட்டடம்  அமைப்பதற்குரிய  காணியை கொள்வனவு செய்வதற்குரிய பணத் தேவைக்காக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நிதிக்கான காசோலை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.சி.எம்.ஏ. சத்தாரால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகரும் அவ் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவருமான வைத்தியர் ஜாபிரிடம் நேற்று (27) கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X