2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

காத்தான்குடி பெரிய பள்ளிவாசல் வைபவ ரீதியாக திறந்துவைப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 30 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன்

காத்தான்குடிக்கு  பலஸ்தீன்  நாட்டின்  ஜெரூஸலம் புனித மஸ்ஜிதுல் அக்ஸா-பைத்துல்  முகத்தஸ் பள்ளி வாயலின்  பிரதான இமாம் அஷ் ஷெய்க் அலி உமர் அப்பாஸி அவர்கள் இன்று(30)  வெள்ளிக்கிழமை  வருகைதந்து காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இதன் போது ஜும்ஆ பிரசங்கத்தையும் ஜும்ஆ தொழுகையையும் நடாத்தி வைத்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அழைப்பின் பேரிலேயே பலஸ்தீன்  நாட்டைச் சேர்ந்த புனித மஸ்ஜிதுல் அக்ஸா-பைத்துல் 
முகத்தஸ் பள்ளி வாயலின்  பிரதான  இமாம அவர்கள் காத்தான்குடிக்கு வருகதந்தார். இமாமவர்களுக்கு   மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இமாமவர்கள் ஜும்ஆ பிரசங்கத்தையும் ஜும்ஆ தொழுகையையும் நடாத்தியதுடன் சிறப்புச் சொற்பொழிவையும் நடாத்தினார். இந்த நிகழ்வுகளில்  கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட உலமாக்கள் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என  பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது இமாம் அவர்களுக்கு முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் உட்பட  காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகமும் இணைந்து நினைவுச் சின்னம் வழங்கி இமாமை கெளரவித்தனர்.
கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்த இமாம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று ஜும் ஆ பிரசங்கத்தையும் உரைகளையும் நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .