Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 26 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில், கொரோனா தொற்றாளர்கள் 67 பேருக்கு சிகிச்சைகள் பெற்றுவருவதாக, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 28 கடற்படை வீரர்களும் ஏனையோர் குவைத் நாட்டிலிருந்து வந்தவர்களுமாவர்.
குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து மின்னேரியா, திருகோணமலை ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக, காத்தான்குடி ஆதார வைத்தியாசலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டதையடுத்து, ஏற்கெனவே 62 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு, அதில் 61 பேர் பூரண குணமடைந்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேவேளை, பெண்ணொருவர், கொழும்பு தேசிய தொற்று நோய் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .