2025 ஜூலை 30, புதன்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலையில் ஆளணியினரை அதிகரிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 16 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலுள்ள ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து,  கணிசமானளவு அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், இன்று தெரிவித்தார்.

தற்போது இவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 130 பேராகவுள்ள ஆளணியினரை, 280ஆக அதிகரிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டும் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரும்  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளை விட, விசேட கவனம் எடுத்து காத்தான்குடி ஆதார  வைத்தியசாலையில்  பௌதீக வளங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில், இவ்வைத்தியசாலையில் புதிய பல பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக, இந்த வைத்தியசாலையின் அபி;விருத்திக்காக மத்திய அரசாங்கத்தின் ஊடாக 85 மில்லியன் ரூபாய் நிதி எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியே அதிகளவான சனத்தொகையைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்நிலையில், காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .