2025 மே 08, வியாழக்கிழமை

காத்தான்குடியிலுள்ள பாடசாலைகளில் பொலிதீனுக்குத் தடை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பொலிதீன் பாவனையை முற்றாகத் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, ஊடகங்களுக்கு இன்று (23) கருத்துத் தெரிவித்த அவர், “காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பொலிதீன் பாவனையைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளோம்” என்றார்.

அதேபோன்று, காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரைத் தற்காலிகமாக மூடுமாறும், சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், மாணவர்களின் சுகாதார நலன்களைக் கவனத்திற்கொண்டு, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாடசாலையிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள், காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பரீசிலிக்கப்பட்டு, அவர்களின் சுகாதார அறிக்கையைப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் பாவிக்க வேண்டிய உணவுகளையே பயன்படுத்த வேண்டும் என்ற அரச சுற்றறிக்கைக்கு ஏற்பட சிற்றுண்டிச் சாலைகளை ஒழுங்குபடுத்திய பின்னர், அவற்றைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X