2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

காத்தான்குடியில் 1,510 லீற்றர் சிக்கியது

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்

காத்தான்குடியில் தனியார் நிறுவனமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார்,  வியாபாரத்துக்காக பரல் மற்றும் தண்ணிர் தாங்கியில்  பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,510 லீற்றர் டீசலை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், ஒருவரையும் கைது செய்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்பு நேற்றிரவு (02) இடம்பெற்றதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆரையம்பதி பகுதியில் வியாபாரத்துக்காக பதுக்கி வைத்திருந்த 135 லீற்றர் டீசலுடன் ஒருவர், ஞாயிறுக்கிழமை (31)  கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X