2025 மே 08, வியாழக்கிழமை

காத்தான்குடியில் சில கடைகளுக்கு சீல்

Princiya Dixci   / 2021 ஜூன் 18 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளன என  சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காத்தான்குடி பிரதான வீதி மற்றும் உள் வீதிகளில், பொலிஸார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், இராணுவத்தினர் மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் இணைந்து திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, பயணக் கட்டுப்பாடுகளை மீறி, அனுமதியின்றி வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X