2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் நாளைமறுதினம் ஷுஹதாக்கள் தினம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த 03.08.1990   காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாயல்களில்  புலிகளினால்  நடாத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களை நினைவு கூரும் ஷுஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடியில்  நாளைமறுதினம்  சனிக்கிழமை காலை கவனஈர்ப்பு பேரணியொன்று நடைபெறவுள்ள இதேவேளை,   காத்தான்குடி முதலாம் குறிச்சி  மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாயல்களில் அல்குர்ஆன் ஓதப்பட்டு, விஷேட துஆப்பிராத்தனைக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.   

முஸ்லிம் தேச ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் என்பன இணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதுடன்,  காலையில் நடைபெறவுள்ள பேரணியின் போது பிரகடனம்  வெளியிடப்படவுள்ளதாகவும்  முஸ்லிம் தேச ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் தெரிவித்துள்ளது.சனிக்கிழமை மாலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஷுஹதாக்கள் பற்றிய ஆய்வுக்கருத்தரங்கும் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X