Princiya Dixci / 2021 மார்ச் 14 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், காத்தான்குடி நகரில் நேற்றிரவு (13) 9.30 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த கார், U வளைவில் திரும்பியபோது, அதிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று காரின் முன் டயரினுள் புகுந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
கிரான்குளத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளே அதிக வேகம் காரணமாக காரில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .