2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

காரைதீவை உலுக்கும் தொடர் சோகம்

Editorial   / 2024 ஜூன் 16 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா

இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை காரைதீவு இழந்திருக்கிறது. காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன் ஆசிரியை விஜயலட்சுமி தம்பதியினரின்  மூத்த புதல்வன்  டாக்டர் இ. தக்சிதன் (BH Kalmunai)  எனும் 34 வயதுடைய வைத்திய அதிகாரியே இவ்விதம் அகால மரணமடைந்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் இ.தக்சிதன் தமது குடும்பத்துடன் உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று வரும் வழியில் பாணமைக்கடலில் தவறிவீழ்ந்த காரணத்தினால் இம் மரணம் சம்பவித்திருக்கின்றது .

 

இவருக்கு மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் இ.மிதுரன் எனும் சகோதரனும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் பயிலும், நிஷாகரி எனும் சகோதரியும் உள்ளனர்.

அன்னாரின் பூதவுடல் பானம வைத்திய சாலையில் வைக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நற்பிட்டிமுனையிலுள்ள அவரது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நற்பிட்டிமுனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரது அகால மரணம் மீண்டும் காரைதீவை சோகமயமாக்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .