2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கார், லொறி மீது கல் வீச்சு: ஒருவருக்கு காயம்: சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூலை 11 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர், சித்தாண்டியில் கார் மற்றும்; லொறியொன்றின் மீதும் கல் வீச்சுத் தாக்குதல்  மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்  பேரில் ஒருவர் திங்கட்கிழமை (10) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என,  பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் அவரது மனைவியும்  கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காரில் பயணித்துள்ளனர்.

அவ்வேளையில் சித்தாண்டிச் சந்தியில் மேற்படி வைத்தியரின் காரை நபரொருவர் வழிமறித்துள்ளார். எனினும்,  வைத்தியர் காரை நிறுத்தாமல் செல்லவே, அவரது கார் மீது குறித்த நபர் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் வைத்தியரின் மனைவி (வயது 36) காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அதே இடத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு,  மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த  லொறியின்; மீதும் குறித்த நபர் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பாகவும் சித்தாண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு  விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், குறித்த சந்தேக நபர் மதுபானப் பிரியர் என்றும் சற்று மனநிலை பிசகியவர் என்றும்  விசாரணையில் தெரியவருகின்றது எனவும் கூறினர்.

இந்தக் கல் வீச்சுத் தாக்குதலில் காருக்கும் லொறிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X