Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 03 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணசபையின் காலம் குறுகியதாக இருப்பதன் காரணமாக, தொழில் உரிமை போராட்டம் நடத்திவரும் பட்டதாரிகளுக்கான தீர்வினை, விரைவாக முன்வைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 133ஆவது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுவருகின்றது.
தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் தொடர்ச்சியாக மத்திய மாகாண அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டே வருவதாக பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமக்கு பல்வேறு உறுதிமொழிகளை மத்திய அரசாங்கமும் கிழக்கு மாகாணசபையும் வழங்கியபோதிலும் இதுவரையிரல் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தமது நிலை தொடர்பில் அக்கரையற்ற நிலையிலேயே தொடர்ந்துஇருந்துவருவதாகவும் தமது நியமனங்கள் தாமதப்படுவதற்கும் அவரே காரணமெனவும் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமக்கான நியமனங்களை வழங்கும் வரையில் தமது போராட்டம் முன்கொண்டுசெல்லப்படும் எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாணசபையின் கால அவகாசம் நிறைவுபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் நடாத்தி நியமனங்களை வழங்குவதற்குரிய கால அவகாசம் போதுமானதாக இல்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசாங்கம் ஆளணி அனுமதியையும் திரைசேரியூடாக நிதி அனுமதியையும் வழங்கியுள்ள நிலையில் இதுவரையில் பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க கிழக்கு மாகாணசபை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் காரணம் என்ன எனவும் பட்டதாரிகள் கேள்வியெழுப்புகின்றனர்.
கிழக்கு மாகாணசபையின் காலம் குறுகியதாக இருப்பதன் காரணமாக தொழில் உரிமை போராட்டம் நடாத்திவரும் பட்டதாரிகளுக்கான தீர்வினை விரைவாக முன்வைக்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
24 May 2025
24 May 2025