2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக பகுதியில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணியினை வேளாண்மை செய்கையாளர்களுக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையினைக் கண்டித்தும், காடுகளை அழிப்பதைத் தடுக்குமாறு கோரியும் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை (17) செங்கலடி நகரில் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச கால்நடை அபிவிருத்தி, பால் சேகரிப்பு கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்ட பேரணியில் நுற்றுக்கணக்கான தமிழ் - முஸ்லிம் பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைய ஏந்தி செங்கலடி சந்தியில் ஆரம்பாமான ஆர்ப்பாட்டப் பேரணி  பிரதேச செயலகம் வரை சென்றது. பிரதேச செயலக முன்றில் தமது கோரிக்கை முன்வைத்து கோசங்களை எழுப்பியவவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டதின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளர் நல்லையா வில்வரத்னத்திடம் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .