2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘கால்நடைகளைப் பதிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தவும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

பண்ணைகளிலுள்ள கால்நடைகளைப் பதிவு செய்துகொள்வதில் கால்நடைத் திணைக்களம் அதிக கவனம் செலுத்த வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், கால்நடை அபிவிருத்திக்காக மட்டக்களப்பில் 38.04 மில்லியன் ரூபாய் நிதியில் கால்நடை உற்பத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், மட்டக்களப்பில் போசனைக்குறைவால்தான் கால்நடைகள் அண்மையில் இறைப்பைச் சந்தித்துள்ளன என சுட்டிக்காட்டிய அவர், மாவட்டத்தில் புற்களை வளர்த்தும் சுத்தமான குடிநீரைக் கொடுத்தும், போசணைகளை கால்நடைகளுக்கு ஊட்டி வளர்பதன்மூலம் கால்நடைகளின் இறப்பைக் குறைத்துக் கொள்ளலாம் என்றார்.

மேலும், கால்நடைகனை முறையாகக் கண்காணித்து, கட்டாக்காலி கால்நடைகளின் எண்ணிகையை மட்டுப்படுத்தி, நல்லின கால்நடைகளை ஊக்குவிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், 279,000 கால்நடைகள் முறையாகப் பதிவு செய்யப்படாமல் உள்ளதாகவும் அவற்றைப் பதிவு செய்வதற்குரிய நடவடிக்கையை கால்நடைப் பண்ணையாளர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .