2025 ஜூலை 23, புதன்கிழமை

கால்நூற்றாண்டுக்குப் பின்னர் மீண்டு வந்துள்ள பஸ் சேவை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கால்நூற்றாண்டுக்குப் பின்னர், ஹட்டனிலிருந்து மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு பஸ்சேவை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் பெரிதும் நன்மையடைவர் என்றும், மட்டக்களப்பு சாலை முகாமையாளர் மாசிலாமணி கிருஷ்ணராஜா தெரிவித்தார்.

நாடாளுமன்ற வாழ்க்கையில் அகவை 40ஐ கொண்டாடும் பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவை வாழ்த்தும் முகமாக, ஹட்டனில் பல்வேறு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இருவழி பஸ் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

ஏற்கெனவே இடம்பெற்று வந்த இந்த பஸ்சேவைகள், யுத்தம் காரணமாக கடந்த 25 வருடங்களாக இடம்பெற்றிருக்கவில்லை. கால்நூற்றாண்டுக்குப் பின்னர், மட்டக்களப்பிலிருந்து மலையகத்தின் பிரதான நகரங்களுக்கூடாக தற்போது பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து மலையகத்துக்கான பஸ்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், பயணிகள் மிகுந்த நன்மையடைவர் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான பஸ், மட்டக்களப்பு செங்கலடி, பிபிலை, பசரை, நுவரெலியா  வழியாக  ஹட்டனைச் சென்றடையவுள்ளது.  தினமும் காலை 7.30 மணிக்கு, மட்டக்களப்பு மற்றும் ஹட்டனிலிருந்து, இந்த பஸ்சேவை இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .