Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூலை 16 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தையும் எமக்குக் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தையும் நாம் சரியாகப் பயன்படுத்தி, எமது மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
'ஆகவே, இந்த விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான இரா.சம்பந்தனும் த.தே.கூவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியினுடைய தலைவர்களும் கவனமாகச் செயற்பட்டு வருகின்றார்கள்' எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு ஏக பிரதிநிதித்துவக் கட்சியாக த.தே.கூவே உள்ளது. அந்த அடிப்படையில், எமது தலைவர் மீது மிகப்பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், த.தே.கூவிலுள்ள நான்கு கட்சிகளும் இப்போது ஒருமித்த சிந்தனையுடன் செயற்படுகின்றன' என்றார்.
'அழிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு, பல வேதனைகளைச் சுமந்தவண்ணமுள்ள எமது தமிழ்ச் சமூகத்துக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம். எமது மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை, எவ்வாறாவது நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும்' என்றார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,'த.தே.கூவை நாம் ஒருபோதும் பலவீனப்படுத்த விட மாட்டோம். த.தே.கூ ஊடாகவே நாம் செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
'கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால், மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகத்துக்கு உரிய விடயமாக இருக்கின்றது. ஆகவே, த.தே.கூவில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .