Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா, வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை மாவட்டத்தில், கல்முனை பிராந்தியத்தையும் நாவிதன்வெளி படுவான் பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான கிட்டங்கி தாம்போதியால் மீண்டும் வெள்ளம் பீறிட்டுப்பாய்கிறது.
இதனால், பரீட்சை தொடக்கம் அலுவலகம் செல்வோர் வரை மிகுந்த சிரமத்தின் மத்தியில் பயணிக்கின்றனர்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில், வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, விவேகானந்தபுரம் - காக்காச்சுவட்டை வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் அவ்வீதியைப் பயன்படுத்துவோர் பலத்தை சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் பட்டாபுரம், பெரியபோரதீவு, பழுகாமம், வேத்துச்சேனை போன்ற பல தாழ்நிலப் பகுதிகளிலும் உள்ளூர் வீதிகளிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .