2025 மே 10, சனிக்கிழமை

கிரவல் மண் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம் பிரதேச மக்கள், கிரவல் மண் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று(23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உறுகாகமம் பிரதேசத்தில் கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதிப் பெற்று காடுகளை அழித்தே கிரவல் மண் அகழப்படுவதாகவும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பிரதேச செயலாளர் கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உறுகாமம் பிரதேசத்தில் குறித்த கிரவல் மண் அகழ்வு நடைபெறும் இடத்துக்குச் சென்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'நிறுத்து நிறுத்து அகழ்வை நிறுத்து', 'அதிகாரிகளே பாரபட்சம் வேண்டாம்', 'எமது வளத்தைச் சூரையாடாதே' போன்ற வாசகங்கள் அடங்கியப் பதாதைகளை  ஏந்தியிருந்தவாறு ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காடுகளை அழித்து மண் அகழப்படுவதால், காடுகளினுள் இருந்து தற்போது யானைகள் தமது கிராமத்துக்குள் வருவதாகவும் தாம் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் இவ்விடயம் குறித்து  கவனஞ்செலுத்துமாறும் கிரவல் மண் அகழ்வை நிறுத்துமாறும் ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X