2025 மே 10, சனிக்கிழமை

கிரான் பகுதியில் விபத்து: இருவர் பலி; நால்வர் படுகாயம்

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், 11 வயதான சிறுவன் உட்பட இருவர் பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து வாழைச்சேனை ​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து, கிரான் பகுதியிலேயே, 26ஆவது மைல்கல்லுக்கு அருகிலேயே நேற்றிரவு (25) 11:20க்கு இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித் அதி சொகுசு தனியார்  பஸ்ஸூம் வாழைச்சேனைப் பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த சிறிய ரக வானும் நேருக்கு நேர், மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

சம்பவத்தில், வானின் சாரதியான கிரான் நொச்சிமுனையைச் சேர்ந்த வினோஜன் (வயது 25), அதே வானில் பயணித்த, மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த பிரகாஷ் கெல்வின் (வயது 11) எனும் சிறுவனும் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளனர். அந்த வானிலேயே பயணித்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X