ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்கள் சேவைக்காக நியமிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினால், பின்தங்கிய கிராம மக்களை முன்னேற்றலாமென, வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - வவுணதீவுப் பிரதேசத்தில், சிறுவர் நலன்களை மேம்படுத்தும் பொருட்டு, சிறுவர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான குழுவின் கூட்டம், வவுணதீவு பிரதேச செயலகத்தில், உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நேற்று (31) நடைபெற்றது.
கிராமங்களில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மாணவர் இடைவிலகல், இள வயதுத் திருமணம், பெற்றோர் மத்தியில் மதுபாவனை, தாய்மார் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதுடன், சிறுவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பில் உதவி பிரதேச செயலாளரால் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த உதவிப் பிரதேச செயலாளர் சுபா மேலும் கூறியதாவது, “எத்தனை அபிவிருத்தித் திட்டங்களை பின்தங்கிய கிராமங்களில் அமுல்படுத்தினாலும், அவற்றை வெற்றிகரமாக்குவதில் கடமைப் பொறுப்புள்ள அரச உத்தியோகத்தர்களின் பங்கும் பணியும் மிக முக்கியமானது.
“கிராமப் புறங்களில் மற்றெல்லா அபிவிருத்திகளையும் விட முக்கியமாக கல்வி மேம்பாடு அடைய வேண்டும்.
“அந்த வகையில், இளம் சிறார்களின் பாடசாலை விலகலையும், பெற்றோரின் மதுப்பாவனையையும் அதனால் ஏற்படும் சமூகச் சீரழிவுக்கான நிலைமைகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.
“எனவே, இந்த விடயங்களுக்குப் பொறுப்பான அரச அலுவலர்கள் மிகவும் கூடிய கவனம் எடுத்து, பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டல் வேண்டும். குறிப்பாக, பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள், அதிபர்களின் அர்ப்பணிப்பான சேவை இன்றியமையாதது” என்றார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago