2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் 33 கைதிகள் விடுதலை

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,  எப்.முபாரக்

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளில் சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்து வந்த 33 கைதிகள், நேற்று (28) பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 20 ஆண் கைதிகளும் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து 13 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைக்கைதிகள் மத்தியிலும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த கைதிகள் விடுதலை இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X