Princiya Dixci / 2021 ஜூலை 31 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் இதன் காரணமாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு பிராந்தியத்தில் மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
நேற்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இதுவரை 8,525 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பில் இதுவரை 2 இலட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவற்றில் 2 இலட்சத்து 6,000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
55 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
7 hours ago