2025 மே 01, வியாழக்கிழமை

கிழக்கில் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவில்லை

Princiya Dixci   / 2021 மார்ச் 07 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கத்தோலிக்க  மறை மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் கறுப்பு ஞாயிறு இன்று (07) அனுஷ்டிக்கப்படவில்லை.

அதேவேளை, வழமைபோல தேவாலயங்களில் திருப்பலி பூஜைகள் நடைபெற்றுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித்தால் இன்று  ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் கறுப்பு உடை அணிந்து பங்கு கொள்ளுமாறும் கறுப்பு நாளாக அனுஷ்க்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். 

எனினும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கத்தோலிக்க மறைமாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் இன்று கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவில்லை. 

இதுவேளை, தமக்கு தேவாலய பங்கு தந்தையான வண. பிதாக்களோ அல்லது  மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்ட ஆண்டகையே இது தொடர்பாக அறிவிக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .