2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் சுற்றுலாத்துறை வளர்ச்சி

Suganthini Ratnam   / 2017 ஜூலை 09 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை  வளர்ச்சியடைந்து வருகின்றது என, ஆசிய மன்றத்தின் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சும் ஆசிய மன்றமும் இணைந்து மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (8) சுற்றுலாத்துறை தொடர்பான செயலமர்வை நடத்தியது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தபோது,'2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையில்; சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து  வருகின்றது.

'இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேலும்; வளர்ச்சியடையச் செய்யும் வகையில்,  அவுஸ்திரேலியாவின்  நிதியுதவியில் ஆசிய மன்றம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

'அந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுலாத்துறையில் காணப்படும் சவால்களுக்கு முகங்கொடுத்து பொருளாதார, அரசியல், சமூக, கலாசார ரீதியாக விடயங்களை  உள்வாங்கி சுற்றுலாத்துறையை வளர்ச்சியடையச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்கள்,  கடல்சார் அமைப்புகளின்; பிரதிநிதிகள், உள்ளூர் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசாங்க நிறுவனப் பிரதிநிதிகளுடன் இணைந்து செயலமர்வுகளை நடத்தி, ஆலோசனைகளைப் பெற்று வருகின்றோம்' என்றார்.

'சுற்றுலாத்துறையில் உள்ளூர் மக்களும் பயனடையும்  வகையில் திட்டங்களை ஏற்படுத்துவதுடன், எதிர்மறையான தாக்கங்களை இதன் மூலம் குறைப்பதையும் நோக்ககாகக் கொண்டுள்ளோம்' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X