Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம்
கிழக்கு மாகாணத்தில் 'பலமில்லாத தமிழர் தலைமைத்துவத்தின் இடைவெளியினை நிரப்புதல்' எனும் தொனிப்பொருளில் கிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவையின் எற்பாட்டில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை(14) கலந்துரையாடலொன்று நாவற்குடா சனிபிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
ஈழத்தமிழர் பேரவையின் தலைவர் பிலிப் முருகையா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், முற்போக்குத் தமிழர் அமைப்பு, மக்கள் முன்னேற்றக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தற்போதைக்கு கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகள், மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவை தொடர்பில் இங்கு கருத்துக்கள் பல பரிமாறப்பட்டதுடன், அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு புதிய கூட்டமைப்பினை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கிழக்கின் தமிழர் அரசியல் தொடர்பில் புதிதாக 'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு' என்ற ஒரு கட்சி அமைக்கப்பட்டுள்ள போதும் மேலுமொரு கூட்டமைப்பு என்ற பெயருடன் கட்சியொன்றினைப் புதிதாக அமைப்பது மக்கள் மத்தியில் சலிப்புத் தன்மையை ஏற்படுத்துவதாக அமையும் என்ற கருத்துக்கமைய,
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கொள்கைப் பரப்புரைகள் மற்றும் யாப்பு விதிகள் என்பவற்றை கட்சிகள் அனைத்தும் ஆராய்ந்த பின்னர், கட்சித் தலைமைகளுடன் கலந்துரையாடி மேலதிக தீர்மானங்களை எடுப்பது தொடர்பாகத் தீர்மானங்கள் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago