2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘கிழக்கில் மு.கா தனிக்கும்’

Editorial   / 2017 நவம்பர் 06 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்திலேயே, இதுவரை இருக்கிறது” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்துக்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏறாவூரிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (05) மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் தீர்மானத்திலேயே இதுவரை இருக்கிறது. அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று சபைகளைக் கைப்பற்ற முழுமூச்சுடன் பல்வேறு வியூகங்களுடன் செயற்படத் திட்டமிட்டுள்ளோம்.

“ஏறாவூர் நகர சபை, காத்தான்குடி நகர சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை என்பவற்றை நிச்சயம் நாம் முழுமையாகக் கைப்பற்றுவோம். அதிலும் குறிப்பாக ஏறாவூர் நகர சபையில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவோம்.

“அவசியம் ஏற்படும் பட்சத்தில் நிச்சயம் நானும் தேர்தலில் களமிறங்குவேன். ஏறாவூரில் என்னால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திகளை முன்நின்று முடித்து வைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்கு உள்ளூர் அரசியல் அதிகாரம் அவசியம் என்ற நிலை வருமானால் நான் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடுவேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X