2025 மே 14, புதன்கிழமை

கிழக்கு ஆளுநர் நியமனத்துக்கு எதிராக மட்டக்களப்பில் ஹர்த்தால்

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா, ஆர்.ஜெயஸ்ரீராம்

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர் அமைப்பால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அனுஷ்டிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, தமிழ் பிரதேசங்களிலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு வழங்கியிருந்தன.

இம்மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு சில மாணவர்கள் செல்லவில்லையென்பதுடன், அரச, தனியார் வங்கிகளும் முடங்கியிருந்தன. வர்த்தக நிலையங்கள், சந்தை ஆகியனவும் பூட்டப்பட்டனுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்பட்டது.

எனினும், சில அரச திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்தமையைக் காண முடிந்தது.

இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாத போதிலும், தூர பிரதேசத்துக்கான சில பஸ் சேவைகள் நடைபெற்றன.

மேலும், வீதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X