2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘கிழக்கு கல்விக்கு ரூ.3,800 மில்.’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்த வருடத்தின் 5,500 மில்லியன் ரூபாய்க்கான கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தித் திட்டங்களில், கிட்டத்தட்ட 3,800 மில்லியன் ரூபாய்க்கான கல்வி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் செய்துமுடிக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் பௌதீக வள அபிவிருத்தி தொடர்பாகக் கேட்ட போது, அவர் இதனை இன்று (09) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒட்டு மொத்தமான 5,500 மில்லியன் ரூபாய்க்கான கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் எஞ்சிய 1,700 மில்லியன் ரூபாய்க்கான கல்வி அபிவிருத்திச் செயற்றிட்டங்களை, இந்த ஆண்டின் இறுதிக்கிடையில் செய்து முடிக்கவுள்ளோம்.

“கடந்த இரண்டரை வருட காலத்தில், கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையின் பௌதீக அபிவிருத்தி என்பது எல்லாவகையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.

“கடந்த ஐந்து வருட காலங்களில் கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்காக செலவுசெய்யப்பட்ட நிதியை விட அதிகமான நிதியைக் கொண்டு, இந்த மாகாண சபையின் இரண்டரை வருட கால நிர்வாகத்தில் கல்வி அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது என்பதை வெளிப்படையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் அறிந்துகொள்ள முடியும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .