2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகப் பகுதியில் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை இன்மை மற்றும் மாணவர்களால் தாக்கப்பட்ட பாதுகாப்பு ஊழியருக்கு நீதி கோரியும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று (09) முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுப்படத் தீர்மானித்துள்ளனரென, கல்விசார ஊழியர் சங்கத்தின் செயலாளர் தங்கவேல் சிறிதரன் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் அவசர கூட்டம், இன்று காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் தற்போதைய சூழ்நிலை ஆராயப்பட்டு, ஊழியர்களின் கருத்துகளுக்கு ஏற்ப இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்திலுள்ள பெரும்பான்மை இன மாணவர்கள், 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 63ஆவது நாளாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுப் (08) பிற்பகல் மாணவர்களால் நிர்வாகக் கட்டடம் முற்றுகையிடப்பட்டபோது, அதனை கடமையின் நிமிர்த்தம் தடுக்க வந்த பாதுகாப்பு ஊழியரான எச்டி.சி.டி.ரணசிங்க (வயது 37), மாணவர்களால் தாக்கப்பட்டதில் கையில் முறிவு ஏற்பட்டு, மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கபட்டுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை, நேற்றிரவு முதல் பெரும்பான்மையின மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

இதற்கமைய, நிர்வாகப் பகுதியில் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை இல்லாத காரணத்தால் கல்வி சார ஊழியர்கள் அனைவரும் நிர்வாகக் கட்டடத்திலிருந்து வெளியேறி, தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .