Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட SMART BOARD விநியோகம், திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து நேற்று (05) வழங்கப்பட்டது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சி.ஷென்ஹோன், ஆளுநரிடம் SMART BOARD கையிருப்பை வழங்கியதை அடுத்து, கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 20 பாடசாலைகளுக்கு தலா ஒரு SMART BOARD வழங்கப்பட்டது.
அங்கு ஆளுநர் மற்றும் சீனத் தூதுவர் ஆகியோர் உரிய SMART BOARDஐ அந்தக் கல்லூரிகளின் அதிபர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே சீனத் தூதுவர் இந்த SMART BOARD கையிருப்பை மிகக் குறுகிய காலத்தில் வழங்கியுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சூரிய சக்தியில் இயங்கும் மின் விளக்குகளை பொருத்துவதற்கான ஒப்பந்தமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது. கிழக்கு மாகாண சபையும் சீனாவின் "யுன்னான் வர்த்தக சங்கமும்" இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
45 minute ago
3 hours ago