Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தி, அதன் பயன்களைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகத் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சால் 2019ஆம் ஆண்டில் 7,346 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 14,225 திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக, அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்துக்குட்பட்ட திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் மூன்றிலும் இத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாகவும் இன்று (29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையின் பிரகாரம், இடம்பெயர்ந்த, அகதிகளாக மீளவும் குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக 1,772 வீடுகள் நிர்மாணிக்கவுள்ளதோடு, அதற்காக 1,772 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் திட்டங்கள் 1,772 அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்காக 82 மில்லியன் ரூபாய் நிதியும் உள் வீதி, நுழைவு வீதி அபிவிருத்திக்காக 107 மில்லியன் ரூபாயும் 1,330 குடிநீர் திட்டங்களுக்காக 36 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி அபிவிருத்தியின் கீழ், கட்டடங்கள் நிர்மாணித்தல், Smart வகுப்பறை, உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 137 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
சிறு வியாபார அபிவிருத்திகளுக்கு 40 மில்லியன் ரூபாயும் விவசாய கைத்தொழில் மேம்படுத்துவதற்காக 56 மில்லியன் ரூபாயும் மீன்பிடிக்காக 25 மில்லியன் ரூபாயும் ஏனைய விசேட திட்டங்களுக்காக 36 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்பெரலிய திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 4,141 மில்லியன் ரூபாய் நிதியில் 9,649 திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன எனவும், அவ்வறிக்கையில் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
4 hours ago