2025 மே 10, சனிக்கிழமை

கிழக்கு மாகாண ஆளுநர் சீயோன் தேவாலயத்துக்கு விஜயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்துக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான்  விஜயலால் டி  சில்வா, இன்று (20) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதலால் சேதமாக்கப்பட்ட தேவாலயத்தின் நிர்மாணப் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அதன் பணிகளைப் பார்வையிடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக, ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிர்மாணப் பணிகளைத் துரித கதியில் நிறைவு செய்யுமாறும் அடுத்த தேர்தலுக்கு முன்னர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் நிர்மாணப் பணிகளை முடிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர், இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X