2025 மே 09, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தளபதி கௌரவிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.அநுர ஜெயசேகரவைக் கௌரவிக்கும் வைபவம், காத்தான்குடியில் நேற்று (07) மாலை நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளனத்தின் அஷ்ஷஹீட் அகமட் லெவ்வை மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.அநுர ஜெயசேகரவின் சேவையைப் பாராட்டி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு ஆகிய நிறுவனங்களால் அவருக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.அநுர ஜெயசேகர எதிர் வரும் 19ம் திகதி சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.அநுர ஜெயசேகர, கல்லடி 231 இராணுவப் படைப் பிரிவின் பிரிகேடியர் மேஜர் மிகுந்து பெரேரா, களுவாஞ்சிகுடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி லெப்டிடன் கேர்ணல் எகல பொல, சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல், பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.ஹாறூன், செயலாளர் ஏ.எம்.அன்சார் நழீமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X