2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பதற்கான செயற்றிட்டங்கள், முழுமூச்சாக இடம்பெற்று வருவதாக, மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது விடயமாக, இன்றைய தினம் (25) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஆளுநர், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள், உல்லாசப் பயணத்துறையில் உயர் விருதுகளைப் பெற்றவர்கள், விளையாட்டில் தடம் பதித்த வீர, வீராங்கனைகளை கிழக்கு மாகாணத்துக்கு அழைத்துவந்து, உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், உல்லாசப் பயணத்துறை ஊக்குவிப்பு சம்பந்தமான நிகழ்ச்சிகள், எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையுள்ள ஒருவார காலத்துக்கு இடம்பெறவுள்ளதாகவும், அவர் கூறினார்.

பாசிக்குடா, குடும்பிமலை (தொப்பிகல), மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு போன்ற உல்லாசப் பயணத்துறைக்குப் பிரசித்தமான பிரதேசங்களை மையப்படுத்தியே, இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகக் கூறிய ஆளுநர், இவ்விடயம் தொடர்பாக, சகல திணைக்களங்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .