Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில், 17,918 மாற்றுத்திறனாளிகள் உள்ளனரென, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தலுள்ள மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில், தமிழ் பரா ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“கிழக்கு மாகாணத்திலுள்ள 17,918 மாற்றுத்திறனாளிகளில், அம்பாறை மாவட்டத்தில் 6,803 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,681பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 4,434 பேரும் உள்ளனர். அவ்வாறே, மந்த புத்தி உள்ளவர்களும் இருக்கின்றனர். இதில் பிறப்பால் விசேட தேவையுடையோர் அல்லாமல், கோரமான யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர் பலர் உள்ளனர்.
இவர்களில் பலர், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, வீட்டினுள் படுத்த படுக்கையாக முடங்கிக் கிடக்கின்றனர்.
இவ்வாறான விசேட தேவையுடையோரை இனங்கண்டு, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களை உள ரீதியாக மேம்படுத்துவதற்காக, பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். விசேட தேவையுடையோருக்கான இல்லங்களாக, அம்பாறை மாவட்டத்தில் இரண்டும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கும், திருகோணமலை மாவட்டத்தல் இரண்டுமாக 8 இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன.
வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் விசேட தேவையுடையோரை வெளிக்கொணர்ந்து, அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த ஆக்கமும் ஊக்கமும் வழங்கி, அவர்களுக்கான அங்கிகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து மாற்றுத்திறனாளிகளை மாற்றத்தை நோக்கி மாற்றியமைக்கின்ற ஒரு நிகழ்வாக, தமிழ் பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பார்க்கலாம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago