வா.கிருஸ்ணா / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின்போது, நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, மட்டக்களப்பில் நேற்று (21) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தால், தேசிய மீன்பிடிக் கொள்கை உருவாக்கப்படும் நிலையில், அதில் மீனவர்களின் பிரச்சினைகளை உள்ளடக்கி, எதிர்காலத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள மீனவர் அமைப்புகளின் பிரதிநிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மீனவர்களின் பிரச்சினைகள் இங்கு படிமுறைப்படுத்தப்பட்டதுடன், மீன்பிடித்துறை அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், தேசிய மீன்பிடிக் கொள்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும், வேறு பகுதிகளில் இருந்து வட- கிழக்கில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாகவும் சட்டவிரோத வலைகள் பயன்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது.
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago