2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாதாந்த நிலுவைக் கொடுபனவு உட்பட ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து,  கிழக்குப் பல்கலைக்கழகக் கல்விசாரா உழியர்கள், இன்று (02) முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று காலை ஒன்று கூடிய கல்விசாரா உழியர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளுடன் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“மாதாந்த இழப்பீட்டுப்படி, 2016 – 2020 வரையான 5 ஆண்டு காலப்பகுதியில் 100 சதவீதமாக அதிகரிக்கப்படுதல் என்ற உடன்படிக்கையின் படி, 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 சதவீதத்தால் இது அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், இது சம்பந்தமான சுற்றுநிரூபம் இதுவரை வெளியிடப்படவில்லை.

“அந்த உடன்பாட்டின் ஐ(IV) இல் குறிப்பிடப்பட்டமையை மீறி, பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களின் ஒரு சாராருக்கு மட்டும் 15% புதிய மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவு, போதனைசாரா ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

“அத்துடன், உடன்பாட்டின் ஐ (ii) க்கு அமைவாக, சம்பள மீளாய்வு 01.01.2017 இலிருந்து வழங்கப்படுவதற்குப் பதிலாக 01.01.2016 முதல் மீள சீர்திருத்தப்பட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், அவ்வாறு இதுவரை வழங்கப்படவில்லை.

“2013ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித்திறன் கொடுப்பணவை உடன்பாட்டின் பிரகாரம் மீண்டும் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

“பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கடன் போதனைசாரா ஊழியர்களுக்கு பாதியளவே வழங்கப்படுகிறது. உடன்பாட்டின் பிரகாரம், சகலருக்கும் சமமாக 2 மில்லியன் கடன் தொகையை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

“சகல பல்கலைக்கழகங்களிலும் திறன்மிக்க காப்புறுதித் திட்டத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டங்கள் எதனையும் அமுல்படுத்தப்படாமையும், பொருத்தமான ஓய்வூதியத்திட்டத்தை உருவாக்குவதற்கான எந்த நடவடிக்கையும் உடன்பாட்டின் பிரகாரம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் கடந்த 34 நாட்களாக பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் உயர்கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X