Editorial / 2017 ஜூன் 03 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, “சூழலை நாம் பாதுகாத்தால் சூழல் எம்மை பாதுகாக்கும்” எனும் தொனிப்பொருளில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்பூட்டும் நிகழ்வு, எதிர்வரும் 05ஆம் திகதி, கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம், கிழக்குப் பல்கலைக்கழகம், கரையோரப் பேணல் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை என்பன அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், கிராம மட்ட அமைப்புக்களுடன் இணைந்து சுழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்பூட்டம் செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, கரையோர பேணல் திணைக்கள திட்டமிடல் உத்தியோகத்தர் வல்லிபுரம் வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகமானது, கடந்த காலங்களில் மாணவர்களுடன் மாத்திரம் தொடர்புபட்டு காணப்பட்டது இயற்கையுடன் ஒன்றிணைதல் விழிப்பூட்டல் நிகழ்வின் மூலம் பல்கலைக்கழகத்துக்கும் அதனை அண்டியுள்ள பிரதேச மக்களுக்குமிடையே தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில், சுழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்பூட்டும் கருத்தரங்கு நடைபெறவுள்ளதுடன், சூழலைப் பாதுகாக்கும் வகையில மரம் நடுதல், வந்தாறுமூலை தொடக்கம் செங்கலடி வரையிலான கூமார் 4 கிலோமீற்றர் தூரம் வீதியின் இரு மருங்கும் துப்பரவு செய்யப்படுவதுடன், அப்பகுதிகளில் மரங்களும் நடப்படவுள்ளன.
9 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago